×

பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறப்பு

திருச்செந்தூர், ஜன. 30: குரும்பூர் அருகேயுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் பள்ளிகளில் ஆங்கில வழி தொடக்கக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான புதிய அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் சுப்பு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். விழாவில் பள்ளி சார்பில் ஏழை மாணவர்கள் 5 பேருக்கு கல்வி செலவாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

 இதில் துணை தலைமையாசிரியர் சுரேஷ்காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் ராஜ்குமார் தொகுத்து வழங்கினார். துணை தலைமையாசிரியர் ஜெசுதாசன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பொருளாளர் ஜெகன்மோகன் செய்திருந்தார்.

Tags : Science Laboratory ,Ganesar School ,Panikkanadar ,
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...